தனுஷுக்கு ரஜினி கொடுத்த அந்த பரிசு? அதன்பின் நடந்த சம்பவங்கள் பற்றி தெரியுமா?
தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து பேசுபொருளான நிலையில், ரஜினிகாந்த் அவரது மருமகனுக்கு அளித்த பரிசு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர்.
அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.
தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதே பலரது ஆசையாக இருக்கிறது.
இந்நிலையில் தனுஷுக்கு ரஜினி, கொடுத்த பரிசு குறித்தும் அதன் பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, தீவிர சிவ பக்தரான தனுஷுக்கு ருத்ராட்சம் ஒன்றை பரிசளித்துள்ளார் ரஜினி, அதன் பின்னரே அவரது வாழ்வில் நேர்மறையாக பல மாற்றங்கள் நடந்ததாம்.