ரஜினிக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வாங்கும் சலூன் கடைக்காரர்.., யார் தெரியுமா?
ஆலிம் ஹக்கீம் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேர் டிரெஸ்ஸராக உள்ளார்.
ரஜினிகாந்த், ஷாருக் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் முதல் விராட் கோலி, எம்.எஸ். தோனி வரை அனைத்து பிரபலங்களும் ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் கட்டிங் செய்து கொள்கிறார்கள்.
இவர்களிடம் ஆலிம் ஹக்கீம் ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்.
ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் கட்டிங் செய்து கொள்ள பிரபலங்கள் முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்குகிறார்கள்.
தற்போது 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் ஆலிம் ஹக்கீம் தனது பயணத்தை தொடங்கியது வெறும் 20 ரூபாயில் இருந்து.
சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆலிம் ஹக்கீம் தனது அற்புதமான பயணத்தைப் பற்றி கூறியுள்ளார். தான் வெறும் 20 ரூபாயில் ஹேர் கட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கூறினார்.
ஆலிம் ஹக்கீமிற்கு 9 வயது இருக்கும்போது, அவரது தந்தை இறந்துவிட்டார். இவரது தந்தை பாலிவுட் ஹீரோக்களுக்கு ஹேர் கட்டிங் செய்து வந்தார்.
தந்தை இறந்ததால் குடும்பப் பொறுப்பை ஏற்க ஆலிம் ஹக்கீம் ஹேர் கட்டிங் செய்யத் தொடங்கினார்.
ஹேர் கட்டிங் மற்றும் ஷாம்பூ போட்டு சுத்தம் செய்ய 30 ரூபாய் வசூலித்தார். பின்னர் மெதுவாக ஹேர் கட்டிங் கடையில் ஏசி பொருத்தி 50 முதல் 75 ரூபாய் வரை வசூலித்தார்.
பிறகு படிப்படியாக பாலிவுட்டில் மிகப்பெரிய ஹேர் டிரெஸ்ஸராக வளர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட தென்னிந்திய படங்களிலும் ஹேர் டிரெஸ்ஸராக பணியாற்றியுள்ளார்.
ஆலிம் ஹக்கீம் இந்திய அணியின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஹேர் கட்டிங் செய்துள்ளார்.
எம்.எஸ். தோனி ஒவ்வொரு தொடர், ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் புதிய ஹேர் ஸ்டைலில் தோன்றுவார். இதற்கு காரணம் ஆலிம் ஹக்கீம்தான்.
விராட் கோலியும் பலமுறை ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |