மருத்துவமனையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து உறவினர் அளித்த முக்கிய தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அவரது உறவினரும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
எனினும், வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரத மனைவி லதா ரஜினிகாந்த கூறினார்.
அதேசமயம், நடிகர் ரஜினிகாந்த் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், ரஜினிகாந்தை மருத்துவமனைக்கு சென்று பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி. மகேந்திரன், அவர் தற்போது மருத்துவமனையில் நல்லபடிகாய ஓய்வெடுத்து வருகிறார்.
அவர் பெறும் சிகிச்சை குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நலமாக இருக்கிறார்.
அண்ணாத்த படம் வெளியாவதற்கு முன்பே அவர் விடுதிரும்புவார் என ரஜினிகாந்தின் உறவினரும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், நடிகர் ரஜினி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.