ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அயோத்தியில் அனுமதி மறுப்பு? கடைசி நேரத்தில் நடந்தது என்ன
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மாபெரும் கும்பாபிஷேக விழா
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை அயோத்தி விழாக்கோலம் பூண்டது. பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர். 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
ரஜினிகாந்த் குடும்பத்திற்கு மறுப்பா?
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை பார்ப்பதற்கு சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் ஏற்ப வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்காக ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, அண்ணன் சத்யநாராயணா மற்றும் பேரன்களுடன் நேற்று அயோத்தி சென்றார். இவருடன் நடிகர் தனுஷூம் சென்றார் என்பது குறிப்பிடதக்கது.
#WATCH | Superstar Rajinikanth arrives at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Pran Pratishtha ceremony pic.twitter.com/1ii6iCsdQ1
— ANI (@ANI) January 22, 2024
இந்நிலையில், அயோத்தியில் விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தார். ஆனால், அவருடன் மனைவி லதா, அண்ணன், பேரன்கள் யாரும் அமரவில்லை.
அப்போது, முன்வரிசையில் தனது குடும்பத்தினரை அமர வைக்காததை கவனித்த ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசினார். இதையடுத்து, அவரது குடும்பத்தார் உள்ளே வந்து ரஜினிகாந்த் அருகே அமர்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |