ஆரம்பத்தில் கண்டக்டராக வேலை பார்த்த பஸ் டிப்போவுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட்
ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேலை செய்த பெங்களூரு போக்குவரத்து கழக பணிமனைக்கு திடீரென சென்று அங்குள்ள பணியாளர்களிடம் பேசி மகிழ்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாள்களுக்கு முன்பு இமயமலைக்கு சென்று திரும்பினார். பின்னர், அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு 'தலைவர் 170’-க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தான் வேலை பார்த்த பெங்களூரு போக்குவரத்து கழக பணிமனைக்கு சர்ப்ரைஸ் ஆக சென்று, அங்குள்ள பணியாளர்களிடம் பேசி மகிழ்ந்துள்ளார். அங்கு ரஜினிகாந்த் திடீரென சென்றது அங்குள்ள ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் ஆனது மட்டுமல்லாமல், பல நினைவுகளையும் ஞாபகப்படுத்தியுள்ளது.
மேலும் அங்குள்ள பணியார்கள், ரஜினிகாந்த் உடன் செல்ஃபி மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Never forget your roots!#Rajinikanth meets BMTC Bus drivers & conductors where he worked as a conductor earlierpic.twitter.com/FJOuy1PuHz
— R a J i V (@RajivAluri) August 29, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |