தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம் குறித்து அன்றே சொன்ன ரஜினி.. தீயாய் பரவும் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரஜினி சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் ஐஸ்வர்யா திருமணம் குறித்து பேசியுள்ளார்.
உங்களுக்கு தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டதில் விருப்பமா? என்று தொகுப்பாளர் ஒருவர் ரஜினியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தை நான் நடத்தி வைக்கவில்லை.
அவர்களின் திருமணத்திற்கு முழுக்க முழுக்க மீடியா தான் காரணம் என்றும் அது ஒரு நிர்பந்தத்தில் நடந்தது என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.