’லியோ’ வெற்றிபெற வாழ்த்திய ரஜினிகாந்த்... என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
’ஜெயிலர்’ பட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘தலைவர் 170’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் 170அவது படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
லியோ குறித்து ரஜினி
படப்பிடிப்பு தளத்தில் லியோ திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜினியிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு அவர், அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் குறித்து ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “புவனா ஒரு கேள்விகுறி படத்திற்கு பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக 1977-ம் ஆண்டு வந்தேன்.
இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள். எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.