தனுஷுடன் சேர்ந்து வாழ முன்வந்த ஐஸ்வர்யா! போட்ட நிபந்தனைகள்
தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்களை சேர்த்து வைக்க நடிகர் ரஜினி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்குமான, 18 ஆண்டு கால திருமண உறவு திடீரென விரிசலை சந்தித்தது. இருவருக்கும் யாத்ரா, லிங்கா என, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவித்தனர்.
இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இன்னும் விவாகரத்து பெறவில்லை. அதனால், இருவரும் சேர வாய்ப்புள்ளது' என, தகவல் வெளியான நிலையில், தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில், ரஜினி இறங்கினார்.
முதலில் ஐஸ்வர்யாவிடம் பேசிய ரஜினி, உன் பிள்ளைகள் எதிர்காலத்தை விட, உன் விருப்பம் முக்கியமாகி விட்டதா? என காட்டமாக கேட்டுள்ளார். ரஜினியின் கடுமையான கண்டிப்புக்கும் அறிவுரைக்கும் பின், சில நிபந்தனைகளுடன் தனுஷுடன் சேர்ந்து வாழ முன்வந்தார் ஐஸ்வர்யா.
ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனுஷ் தந்தை கஸ்துாரிராஜாவிடமும், தனுஷிடமும் பேசி, சமாதான நடவடிக்கைகளை, ரஜினி தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரியாமல் தடுக்க, பேரன்கள் வாயிலாகவும் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார் ரஜினிகாந்த்.