நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
எனினும், வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த கூறினார்.
அதேசமயம், நடிகர் ரஜினிகாந்த் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் அக்டோபர் 29ம் திகதி காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மயக்கம் ஏற்பட்டது காரணமாக ரஜினிகாந்த் அக்டோபர் 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையை முழுமையாக பரிசோதித்த மருத்துவர்கள் நிபுணர்கள் குழு, ‘Carotid Artery Revasculation’ செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத்தொடரந்து இன்று அவருக்கு ‘Carotid Artery Revasculation’ வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார்.
— Kauvery Hospital (@kauveryhospital) October 29, 2021
இன்னும் சில நாட்டுகளில் அவர் வீடு திரும்புவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.