கடைசி வரை நிறைவேறாத ஆசை: ராஜீவ்காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட நிலையில் சாந்தன் உயிரிழந்துள்ளார்.
காலமானார் சாந்தன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
32 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வந்தவர்களை தமிழ்நாடு அரசு விடுவிப்பதற்கு தீர்மானம் எடுத்தது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.
ஆனால் இலங்கைளை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாய் நாட்டிற்கு செல்வதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.
எனவே திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
அங்கு போதுமான வசதி இல்லாத காரணத்தினால், இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
மறுபக்கம் சாந்தனுக்கு முகாமில் உடல் நிலை மோசமானது. ஆகவே சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
உடல்நிலையானது மேலும் மோசமடைந்து சென்றமையால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலையாகியும் ஒன்றரை ஆண்டுகளில் தாய் நாட்டிற்கு செல்ல முடியாமல் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |