நளினி, முருகன் உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மனு தாக்கல்: காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என நாராயணசாமி கூறியுள்ளார்.
ஆறு பேரும் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர்ஸ், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்தனர்.
இந்த நிலையில் ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர்கள் விடுதலையானார்கள். இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்க்கு ஏற்புடையதல்ல
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றமே மாற்றுவது, ஜனநாயகத்திற்க்கு ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.