ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயர்ஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் பேரறிவாளன் கடந்த மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முடிவெடுக்காத ஆளுநர்.
இந்த நிலையில் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று, அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ரவி முடிவெடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து இன்றோ அல்லது நாளையோ ஆறு பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.