பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்ப்பு மற்ற 6 தமிழர்களுக்கும் பொருந்தும்! முக்கிய தகவல்
பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி தாமஸ் கூறியுள்ளார்.
நீதிபதி கே.டி தாமஸ் தான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தவர் ஆவார்.
விடுதலை கிடைத்த பின்னர் பேரறிவாளன் அளித்த பேட்டியில் நீதியரசர் கே.டி தாமஸுக்கு நன்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில் கே.டி தாமஸ் அளித்த பேட்டியில் பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்ப்பு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட்ஸ் பயஸ், சாந்தன் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும்.
ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வெவ்வேறு தீர்ப்பை வழங்க முடியாது.
இவர்களை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அப்படி நடக்காததால் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றம் சரியான தீர்ப்பளித்துள்ளது என கூறியுள்ளார்.