தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பாளர் மரணம்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணு(வயது 77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கன்னிப் பருவத்திலே, மகாநதி போன்ற படங்களை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
இவர் தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்துமே இன்று வரை ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்திருக்கிறது.
ரஜினி, கமல், ராதிகா, கவுண்டமணி என புகழ்பெற்ற பிரபலங்களின் பட்டியலும் அதிகம்.
வெற்றிப் படங்களை தயாரித்தாலும் சில வருடங்களில் படத்தயாரிப்பில் ஈடுபட முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்யா படம் ஒன்றுக்கு பூஜை செய்யப்பட்டு அதோடே நின்று போனது.
தொடர்ந்து வயது முதிர்வின் காரணமாகவும், பணம் இல்லாமலும் கஷ்டப்பட்ட ராஜகண்ணு கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் ஒருநாள் குளியல் அறையில் தவறிவிழ கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
"16 வயதினிலே"திரைப்படத்தின்
— Bharathiraja (@offBharathiraja) July 11, 2023
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி
திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின்
மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/OGMSc2DnQv
இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார், இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என்னை இயக்குனராக அறிமும் செய்த என் முதலாளி ராஜகண்ணுவின் மனைவி எனக்கும் என் குடும்பத்துக்கும் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |