ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு இதுதான்...!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
வரும் மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுத்தது. அவர்களை கொண்டு ரோகித் சர்மா சாதிப்பாரா? சறுக்குவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
இதனிடையே மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் மிக முக்கியமான வீரரை தவறவிட்டு விட்டதாக விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் டிரென்ட் போல்ட்டை மும்பை அணி வாங்கியிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பும்ரா மற்றும் போல்ட் ஜோடி ம்பை அணிக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் 2020 ஆம் ஆண்டு அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அந்த சீசனில் அவர்கள் இருவரும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள்.
ஆனால் மும்பை அணி ட்ரென்ட் போல்ட்டை வாங்காமல் இம்முறை தவறு செய்து விட்டது. அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உணத்கட் மும்பை அணியால் வாங்கப்பட்டாலும் அவரை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளதாக ராஜ்குமார் கூறியுள்ளார். மும்பை அணியில் நிறைய வீரர்கள் இருந்தாலும் அவர்களை எப்படி ஒன்றிணைக்கப் போகிறார்கள் என்பதை காண ஆவலாக உள்ளதாக ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.