என்னை நிர்வாண வீடியோ எடுத்து 47 லட்சத்திற்கு விற்றுள்ளார்! பிரபல நடிகை கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் காதல் கணவர் தன்னுடைய நிர்வாண வீடியோவை விற்றுள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
காதல் கணவர் மீது குற்றச்சாட்டு
இந்தியில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ராக்கி சாவந்த் (44), ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் அவர் தன்னை அடிக்கிறார் என அடுக்கான புகார்களை பொலிசாரிடம் ராக்கி சாவந்த் அளித்ததைத் தொடர்ந்து, ஆதில் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்ததும் ராக்கி சாந்த் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.
முதல் கணவரிடம் ரகசிய உறவில் ராக்கி சாவந்த் இருந்ததாகவும், அவர் தான் என்னை தாக்கினார் என்றும், தன்பாலின ஈர்ப்பாளர் என என்னை முத்திரை குத்த முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மீண்டும் அதிர்ச்சி கொடுத்த ராக்கி சாவந்த்
இந்த நிலையில் ராக்கி சாவந்த் மீண்டும் கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் கூறுகையில், 'ஆதில் எனது நிர்வாண வீடியோக்களை துபாயில் ரூ. 47 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார்.
நான் குளியறையில் இருந்தபோது என்னை முழு நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் என்னை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்.
என் முகத்தை எப்படி உலகுக்குக் காட்டுவது? நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? முழு உலகமும் என் நிர்வாணத்தைப் பார்த்தால் நான் எங்கு செல்வேன்?' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |