அடேங்கப்பா... நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா...? வாயடைத்த ரசிகர்கள்
சமூகவலைத்தளங்களில் நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ராம் சரண்
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவருடைய மனைவி சுரேகா. இவர்களுடைய மகன் தான் நடிகர் ராம்சரண். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ராம் சரண், உபாசனா என்ற பெண்ணை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாவார். கடந்த 11 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இத்தம்பதி தற்போது தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர்.
தற்போது உபாசனா கர்ப்பமாக உள்ளார். தற்போது, தந்தை, தாய், மனைவியோடு ராம் சரண் ஐதராபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். ஜூப்லி ஹில்ஸின் ஆடம்பரமான காலனிகளில் அமைந்துள்ள இந்த வீடு, 25,000 சதுர அடியில் ரூ. 40 கோடி மதிப்பு கொண்டதாகும்.
இந்த பங்களாவில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கோயில், கிங் சைஸ் படுக்கையறைகள் மற்றும் பல ஆடம்பர வசதிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தை உயர்த்தி ராம் சரண்
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு முன் வரை ராம் சரண் ரூ.35 முதல் 40 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். தற்போது, இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தியுள்ளார். ராம்சரண் நடிப்பில் தற்போது கேம் சேஞ்சர் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
ராம் சரணின் சொத்து மதிப்பு
சமூகவலைத்தளங்களில் தற்போது ராம் சரணின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. ராம்சரணுக்கு 175 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய நிகர மதிப்பை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இது இந்திய ரூபாய் மதிப்புப்படி ரூ.1370 கோடியாகும். அவரது வருமானத்தில் பெரும்பகுதி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைப்படங்களிலிருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.