திருமணமாகி 10 வருடத்திற்கு பின் கர்ப்பமான நடிகரின் மனைவி: வெளியான கரு முட்டை ரகசியம்
தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரணின் மனைவி, 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமாகியிருக்கும் நிலையில், தற்போது கருமுட்டை பற்றிய ரகசியத்தை கூறியுள்ளார்.
பிரபல நடிகர் ராம் சரண்
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம் சரண் பல்வேறு படங்களில் நடித்து, தெலுங்கின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
@twitter
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர், சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான RRR படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.
தனது சிறந்த நடிப்பாலும், நடனத்தாலும் பல ரசிகர்களை கொள்ளை கொண்ட இவர், தற்போது இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார்.
கரு முட்டை விவகாரம்
பிரபல நடிகரான ராம் சரண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக உபாசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக குழந்தை இல்லாத உபாசன்னா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு, ”அதில் நான் சரியான நேரத்தில் குழந்தை பெற்று கொள்ள போகிறேன், இது எனது முதல் அன்னையர் தின கொண்டாட்டம்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.
அதில் ’திருமணத்திற்கு முன்னரே நாங்கள் கரு முட்டையை பாதுகாக்க திட்டமிட்டோம், அதன்படி பல்வேறு தொழில் ரீதியான காரணங்களுக்காகவும், எங்களது வருமானத்தை பெருக்கி கொண்டு குழந்தையை பராமரிக்க திட்டமிட்டோம்’ என கூறியுள்ளார்.
@instagram
இதனிடையே கருமுட்டை சேமிப்பை வைத்து தான், ராம் சரண் மனைவி கர்ப்பமாகி உள்ளாரா? என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.