அயோத்தி ராமர் கோயிலின் முதல் நாள் பக்தர்களின் காணிக்கை.., இத்தனை கோடிகளா?
அயோத்தி ராமர் கோயிலின் முதல் நாள் 5 லட்சம் பக்தர்கள் தரிசித்து பல கோடிகளில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், பாலகன் ராமர் சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வு கடந்த 22-ம் திகதி கோலாகலமாக நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள், ஆன்மீக குருக்கள், நடிகர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.
முதல் நாள் காணிக்கை
இந்நிலையில், முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர்.
அன்றைய தினத்தில் மட்டும் காணிக்கையாக பக்தர்கள் ரூ.3 கோடியே 17 லட்சம் செலுத்தி உள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |