மூன்றாவது முறையாக 5 விக்கெட்! மாயாஜால சுழலில் மிரட்டும் இலங்கை வீரர்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார்.
காலேவில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 231 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தானின் மூன்று வீரர்கள் அவரது பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
10வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரமேஷ் மெண்டிஸ், ஒரு டெஸ்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது மூன்றாவது முறையாகும். அவர் இதுவரை 42 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.
Impressive figures ?
— ICC (@ICC) July 26, 2022
Watch #SLvPAK live on https://t.co/MHHfZPzf4H (in select regions) ? | ? https://t.co/KESu4wdjMG pic.twitter.com/hn1gzXP2zr
ஒருமுறை 11 விக்கெட்டுகளை ஒரே டெஸ்டில் கைப்பற்றிய மெண்டிஸ், வெறும் 18 இன்னிங்ஸ்களில் அபாரமாக பந்துவீசி மிரட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
PC: AFP