ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்.., பிரதமர் மோடி இரங்கல்
ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் இன்று அதிகாலை காலமானார்.
மறந்த ராமோஜி ராவ்
ஈநாடு மற்றும் ராமோஜி குழும நிறுவனர் ராமோஜிராவ் 1936 நவம்பர் 16 ஆம் திகதி ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புடபருபுடி கிராமத்தில் பிறந்தார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் கடந்த ஜூன் 5 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
ராமோஜி ராவ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார்.
அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன.
The passing away of Shri Ramoji Rao Garu is extremely saddening. He was a visionary who revolutionized Indian media. His rich contributions have left an indelible mark on journalism and the world of films. Through his noteworthy efforts, he set new standards for innovation and… pic.twitter.com/siC7aSHUxK
— Narendra Modi (@narendramodi) June 8, 2024
அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார்.
அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்தால் பயனடைவதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி.
இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |