கத்தார் உலகக் கோப்பை... செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர்பில் இன்று நடந்த இரண்டாவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து, செனகல் அணிகள்
இதனால் காலிறுதி ஆட்டத்தில் சீற்றம் கொண்ட பிரான்ஸ் அணியை இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கிறது. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
@alamy
இன்று நடந்த இரண்டாவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர்.
ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் அணியின் தலைவர் ஹரி கேன் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.
@PA
இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நாக் அவுட் வெற்றி
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.
@getty
செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியவில்லை. மட்டுமின்றி 2002 க்கு பின்னர் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நாக் அவுட் வெற்றி இதுவெனவும் கூறப்படுகிறது.
@getty