மன்னர் சார்லசுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவில் ஒரு இந்திய வம்சாவளி மருத்துவர்...
மன்னர் சார்லசுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவில் ஒரு இந்திய வம்சாவளி மருத்துவரும் முக்கிய இடம் வகிக்கிறார்.
யார் அவர்?
அவரது பெயர் ரானன் தாஸ்குப்தா (Dr.Ranan Dasgupta). தாஸ்குப்தா, கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்வி பயின்றவர் ஆவார்.
தாஸ்குப்தா, புரோஸ்ட்ரேட் வீக்கம், சிறுநீரகக் கற்கள், சிறுநீரக புற்றுநோய் முதலான உடல் நல பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் ஆவார்.
Telegraph
தற்போது, மன்னருக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் Serjeant Surgeon என்னும் பொறுப்பு வகிக்கிறார் தாஸ்குப்தா.
இந்திய வம்சாவளியினர் என்பதில் பெருமை
பிரித்தானியாவில் நிலவும் இனவெறுப்பு குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் தாஸ்குப்தா. பிரித்தானிய மருத்துவ அமைப்பு, வெளிநாட்டவர்களை நம்பியிருப்பதைக் குறைக்கவேண்டும் என பிரித்தானிய மூத்த மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்தக் கருத்து தன்னை பாதித்ததாக தெரிவித்த தாஸ்குப்தா, இந்திய வம்சாவளியினர் என்பதில் தான் மிகவும் பெருமையடைவதாகவும், அதே நேரத்தில் தான் ஒரு பிரித்தானியக் குடிமகன் என்பதிலும் தனக்கு அதே அளவு பெருமை உண்டு என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |