நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்! இலங்கைக்கு இந்திய அணி வந்துள்ள நிலையில் காட்டமாக பேசிய ஜாம்பவான் ரணதுங்கா
இலங்கைக்கு கிரிக்கெட் தொடரில் விளையாட ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் ஜாம்பவான் அர்ஜுனா ரணதுங்கா காட்டமாகப் பேசியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மண்ணைக்கவ்விய இந்திய மூத்த வீரர்கள் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக அங்கேயே தங்கியுள்ளது.
இலங்கைக்கு டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்காக ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணி ராகுல் திராவிட் மேற்பார்வையில் சென்றுள்ளது. இப்படி இரண்டாம் தர அணியை அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என்று 1996 உலகக்கோப்பையை வென்ற அர்ஜுனா ரணதுங்கா காட்டமாகப் பேசியுள்ளார்.
இதற்குக் காரணம் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகமே என்று அர்ஜுனா ரணதுங்கா சாடியுள்ளார். மேலும் பணத்துக்காகவும், தொலைக்காட்சி மார்க்கெட்டிங் தேவைகளுக்காகவும் இப்படிப்பட்ட தொடரை ஏற்றுக் கொள்வது முறையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது இரண்டாம் தர இந்திய அணி இப்படிப்பட்ட இந்திய அணி இங்கு வந்திருப்பது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.
டெலிவிஷன் மார்க்கெட்டிங் தேவைகளுக்காக இப்படிப்பட்ட அணியுடன் ஆட ஒப்புக் கொண்டதற்காக நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே சாடுவேன்.
சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டு பலவீனமான அணியை இங்கு அனுப்பியுள்ளனர் என கூறியுள்ளார்.