திருமணத்தில் தங்க நகைகளில் ஜொலித்த நடிகை! நீண்டநாள் காதலியை கரம்பிடித்த பிரபல நடிகர்
பிரபல இந்தி நடிகரான ரன்தீப் ஹூடா தனது நீண்ட நாள் காதலியும், நடிகையுமான லின் லைஷ்ரமை திருமணம் செய்தார்.
ரன்தீப் ஹூடா
2001ஆம் ஆண்டில் வெளியான மான்சூன் வெட்டிங் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா.
அதனைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகை மற்றும் தொழிலதிபரான லின் லைஷ்ரமும் டேட்டிங் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. மணிப்பூரின் இம்பாலில் மெய்தே பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது.
வைரல் புகைப்படங்கள்
மணப்பெண்ணான லின் லைஷ்ரம் தங்க நகைகளில் ஜொலித்தார். இந்த திருமண விழாவில் மணமகன், மணமகளின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றுமுதல் நாங்கள் ஒருவராகிவிட்டோம் என ரன்தீப் ஹூடா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரன்தீப் ஹூடா - லின் லைஷ்ரம் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |