கேசவ விநாயகம் மாற்றத்திற்கு அண்ணாமலை காரணமா? கோபமான ரங்கராஜ் பாண்டே
பாஜகவில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் குறித்து ரங்கராஜ் பாண்டே பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை விலகல்
2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக கூட்டணியில் இணைந்து சந்திக்க உள்ள பாஜக குறைந்தது 30 தொகுதிகளை பெற்று அதில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக தொண்டர்களை ஒருங்கிணைக்க முக்கிய தலைவர்களை சுற்றுப்பயணம் அனுப்ப உள்ளது பாஜக.
2 முதல் 7 தொகுதிகளுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் 72 பொறுப்பாளர்களை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

இதில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், தந்தையின் உடல்நிலை காரணமாக இந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தமிழகத்தில் RSS கூட்டம் நடைபெற்ற நிலையில், இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர், பாஜகவின் அமைப்பு செயலாளராக 12 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கேசவ விநாயகம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜகவில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதில், தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் முக்கிய பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏன்?, இது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அவரின் பணி என்ன? அண்ணாமலை பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? கேசவ விநாயகம் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அண்ணாமலைக்கு பங்கு உள்ளதா? தேர்தலை எதிர்கொள்ள பாஜக எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ரங்கராஜ் பாண்டே பதிலளித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடீயோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |