அதிரடி வீரர்கள் ரஸல், டிம் டேவிட் அவுட்! 85 ஓட்டங்களில் சுருண்ட அணி..வங்காளதேச டி20யில் படுதோல்வி
டாக்காவில் நடந்த BPL டி20யில் குல்னா டைகர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
ரஸல் சொதப்பல்
முதலில் துடுப்பாடிய ராங்பூர் ரைடர்ஸ் அணியில், சவுமியா சர்க்கார் முதல் பந்தை சந்திக்காமலேயே ரன்அவுட் ஆனார்.
அடுத்து ஜேம்ஸ் வின்ஸ் 1 ரன்னிலும், மஹிதி ஹசன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சைப்ஃபுடின் 8 ஓட்டங்களில் lbw ஆனார்.
15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராங்பூர், அதிரடி வீரர் டிம் டேவிட்டின் விக்கெட்டையும் (7) இழந்தது.
சிக்ஸர்களை தெறிக்கவிடக் கூடிய ஆந்த்ரே ரஸல் (Andre Russell) 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நவாஸ் ஓவரில் ஆட்டமிழந்தார்.
Andre Russell couldn't make it big 💔#BPL2025 #WaltonSmartFridge pic.twitter.com/GL1ZFWh4XU
— bdcrictime.com (@BDCricTime) February 3, 2025
முகமது நைம் அபாரம்
எனினும் அணித்தலைவர் நுருல் ஹசன் 25 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டம் காட்டிய ஆஃப் ஜாவேத் (Akif Javed) 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
Tim David departs cheaply, Rangpur 32-6#BPL2025 #WaltonSmartFridge pic.twitter.com/x5lq2UydCM
— bdcrictime.com (@BDCricTime) February 3, 2025
ராங்பூர் அணி 16.5 ஓவரில் 85 ஓட்டங்களுக்கு சுருண்டது. மெஹிதி ஹசன், நசுன் அகமது தலா 3 விக்கெட்டுகளையும், நவாஸ், ஹசன் மஹ்மத் மற்றும் முஸ்பிக் ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய குல்னா டைகர்ஸ் 10.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது நைம் 33 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், அலெக்ஸ் ரோஸ் 29 (27) ஓட்டங்களும் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |