நண்பன் நோன்பு துறப்பதற்காக காயம்பட்டதுபோல் நடித்த கால்பந்தாட்ட வீரர்! நெகிழவைக்கும் வீடியோ
கால்பந்தாட்ட போட்டிக்கு நடுவே தனது சக வீரர் நோன்பு துறக்க வாய்ப்பளிக்கும் விதமாக, காயம்பட்டதுபோல் போலியாக நடித்த இத்தாலிய வீரரின் செயல் காண்போரை நெகிழவைத்தது.
காயம்பட்டதுபோல் நடித்த கால்பந்தாட்ட வீரர்
மிலனில் உள்ள சான் சிரோவில் சனிக்கிழமை நடந்த Serie A 2022-23 போட்டியில், இத்தாலியின் ஃபியோரெண்டினா (ACF Fiorentina) மற்றும் இண்டர் மிலன் (Inter Milan) இடையே நடந்த கிளப் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த ஆட்டத்தின்போது, ஃபியோரெண்டினா அணியைச் சேர்ந்த இத்தாலிய கால்பந்து வீரர் லூகா ராணியேரி (Luca Ranieri), தனது அணி வீரரான மொராக்கோவைச் சேர்ந்த சோபியான் அம்ராபத்துக்கு (Sofyan Amrabat) நோன்பு துறக்க வாய்ப்பளிப்பதற்காக காயம் ஏற்பட்டதாக நடித்ததாக கூறப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.
givemesport
ஆட்டத்தின்போது நோன்பு துறந்த வீரர்
ஆட்டத்தின்போது ராணியேரி கால்பந்து மைதானத்தில் தனது போலியான காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அம்ரபத் அவசரவசரமாக வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து தனது விரதத்தை முடித்ததை அந்த வீடியோ காட்டுகிறது.
போட்டியின் வர்ணனையாளர்களும், ஃபியோரெண்டினா மிட்ஃபீல்டருக்கு நோன்பு துறக்கும் வாய்ப்பாக்க ரனீரியின் நடவடிக்கை இருப்பதாக கூறினர்.
Watch: Italy’s #Fiorentina footballer Luca Ranieri reportedly fakes an injury during his club’s game against #InterMilan in order to give his teammate, #SofyanAmrabat, a chance to break his fast, a video shared on social media shows.https://t.co/KHxbZofYXo pic.twitter.com/uGFnivoF25
— Al Arabiya English (@AlArabiya_Eng) April 3, 2023
ஐந்து நிமிட கூடுதல் நேரத்துடன் 91:34 நிமிடத்தில் இந்த தருணம் நடந்தது மற்றும் ஃபியோரெண்டினா ஒரு கோலுடன் இண்டர் மிலானை விட முன்னிலையில் இருந்தது. இப்போட்டியில் இண்டர் மிலனுக்கு எதிராக ஃபியோரெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் மார்ச் 23 அன்று தொடங்கியது மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள் மற்றும் சுஹூருக்குப் பிறகு மீண்டும் நோன்பைத் தொடங்குவதற்கு முன் இப்தாருடன் நோன்பை முறித்துக் கொள்கிறார்கள்.
? İtalya'nın Fiorentina takımında forma giyen Luca Ranieri, federasyonun oruç arası vermemesi sebebiyle sakatlık geçirmiş gibi yaparak, Müslüman takım arkadaşı Sofyan Amrabat'ın orucunu açabilmesi sağladı. pic.twitter.com/aZz0Z73jN6
— Daily Islamist (@dailyislamist) April 2, 2023