ரணில் - பில் கேட்ஸ் சந்திப்பு : இலங்கைக்கு ஆதரவு வழங்க தயார் - பில் கேட்ஸ் உறுதி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பில் கேட்ஸ் ஆகியோருக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது டுபாயில் நேற்றைய தினம் காலநிலை தொடர்பான COP 28 மாநாட்டிலேயே நடைபெற்றுள்ளது.
ரணில் - கேட் சந்திப்பு
இந்த சந்திப்பின் போது கேட்ஸ், இலங்கையில் வலுவான மற்றும் காலநிலைக்கு ஏற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு BMGF நிறுவனம் தனது ஆதரவை அழிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார்.
President @RW_UNP engaged in discussions with @BillGates during @COP28_UAE, focusing on global challenges and #SriLanka's potential leadership in the tropical belt. (1/2) pic.twitter.com/rpRBEiz8lB
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) December 3, 2023
இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் விவசாயத்திற்கான தரவுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.
மேலும் உலகிற்கே சவாலாக மாறியுள்ள சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் பயனுள்ள பங்கை வகிக்க இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |