நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து! 4 முக்கிய ஒப்பந்தங்கள்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
AP
இதன்போது 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அதில், நாகை- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து, இந்தியா- இலங்கை இடையே விமான போக்குவரத்தை அதிகரித்தல், இலங்கையில் இந்தியாவின் UPI பரிவர்த்தணையை அனுமதிக்கும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல் இணைப்பு- பிரதமர் மோடி- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
MEA India
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியா வந்திருந்தார்.
இவருடன் மீன்வளத்துறை அமைச்சர், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர், வெளிவிவகாரத்து துறை அமைச்சர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
HT Photo/by RajkRaj
இந்நிலையில் இன்று புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நரேந்திர மோடியை சந்திந்தார் ரணில் விக்ரமசிங்க.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் மேம்படும் என நம்பப்படுகிறது.
PTI
இலங்கை ஜனாதிபதியாக ரணில் பதவியேற்ற பின்னர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கத்தவிக்கும் இலங்கையில், இந்தியா, மின்சக்தி, எரிசக்தி, கடல்சார் பணிகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாகவும், மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெறலாம் என தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |