இலங்கையின் புதிய பிரதமர் ரணில் மக்களுக்காக எடுக்கும் முதல் அதிரடி நடவடிக்கை! இதுதான் அவரின் திட்டம்
இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மக்கள் வாழ கூடிய சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருகிறார். பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
முதலில் மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்கி, மக்கள் வாழ கூடிய சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே பல வெளிநாடுகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது.
 
அதேபோன்று தற்போதைய நெருக்கடியான நிலையிலும் நிவாரணங்கள் அடங்கிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        