இலங்கை திரும்ப இது சரியான தருணம் இல்லை: கோட்டாபய குறித்து ஜனாதிபதி ரணில் கருத்து!
கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு மீண்டும் திரும்பிவதற்கு இது சரியான தருணம் இல்லை என அந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இலங்கையில் இருந்து வெளியேறி முதலில் மாலத்தீவிற்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்திந்த நாடாளுமன்ற பேச்சாளர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் தாய் நாட்டிற்கு திரும்புவார் என தெரிவித்தார்.
இந்தநிலையில் Wall Street Journal பத்திரிக்கைக்கு நேர்காணல் வழங்கிய இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம்சிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு இது சரியான தருணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
அத்துடன் தனக்கு தெரிந்த வரை கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான எத்தகைய அறிகுறிகளும் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: இந்தியாவில் முதல் குரங்கம்மை இறப்பு? அவசர நிலையில் கேரளா சுகாதாரத் துறை
பொருளாதார நெருக்கடி குறித்து கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, நாங்கள் ஏற்கனவே நெருக்கடியின் அடிநிலையை தொட்டுவிட்டோம், இருப்பினும் இருள் குகையில் தென்படும் வெளிச்சத்தை பார்க்க முடிகிறது, அவற்றை எவ்வளவு விரைவாக அடைய முடிகிறது என்பதில் தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.