தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ரணில்: சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் சர்ச்சை!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெயரில் ஏற்பட்ட சர்ச்சை
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவின் பெயரை ஜனாதிபதி தமிழ் விக்ரமசிங்க (President Tamil Wickremesinghe) என்று தவறாக எழுதியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக இவ்விடயம் பேசப்பட்டு வருகின்றது.
கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளது. மேலும் ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு அறிவித்ததையடுத்து பிழை திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |