ரணில் உடல்நிலையில் தொடரும் கவலை! சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனை
இலங்கை முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், உயர் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்து செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆலோசனை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலை சிங்கப்பூர் அழைத்து செல்ல ஆலோசனை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சைக்காக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா
இருப்பினும் அவரது உயர் ரத்த அழுத்தம் சீராகாததை அடுத்து, அவரை நீதிமன்ற அனுமதியுடன் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வரும் 26ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |