கணவரின் குடும்பமே நடத்திய கொலை வெறித்தாக்குதல்! வீங்கிய முகத்துடன் தமிழ் நடிகை புகார்
தனது கணவரின் குடும்பத்தார் அடித்து துன்புறுத்துவதாக துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துணை நடிகை ரஞ்சனா நாச்சியார்.
இவர் சென்னை போரூர் பகுதியில் கணவர், மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது கணவரின் பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ரஞ்சனா பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பலமாக தாக்கப்பட்டு வீங்கிய முகத்துடன் ஊடகத்தை சந்தித்த அவர் கூறுகையில், 'எனது கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனது மாமனார் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மாமியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, 17 ஆண்டுகளாக தான் வேதனை அனுபவித்து வருவதாகவும், மாமனார் சரவணவேல் தன்னிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவான நடிகையின் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.