இந்து கடவுளை இழிவாக பேசிய உதவி இயக்குநர் மீது வழக்கு: கொந்தளித்த ரஞ்சித்
இந்து கடவுளை இழிவாக கவிதை பாடிய குற்றத்திற்காக, பிரபல இயக்குநர் ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதற்கு எதிராக ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து கடவுளை இழிவு படுத்தும் கவிதை
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இவரது உதவி இயக்குநரான விடுதலை சிகப்பி என்ற விக்னேஷ்வரன், கடந்த மாதம் ஏப்ரல் 30ஆம் திகதி சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார்.
இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோர் மலம் அள்ள வாருங்கள், என்பது போல் மலக்குழி மரணத்திற்கு எதிராக கவிதை சொல்லியுள்ளார்.
வழக்குப் பதிவு
இந்த வீடியோ இணையத்தில் பரவி பலரும் உதவி இயக்குநரின் தைரியத்தை பாராட்டினர். மேலும் இந்து முன்னணி கட்சியினர் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
If you do not arrest this guy IMK will put out videos of Prophet Mhd and Jesus in the same tone.@tnpoliceoffl @mkstalin pic.twitter.com/StYmKDkM2R
— Indu Makkal Katchi (Offl) ?? (@Indumakalktchi) May 6, 2023
இதனையடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணம் திருப்பதி, விடுதலை சிகப்பி மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் சமூக வலைதளங்களில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பதிவு வெளியிட்டதாக, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும் புகார் அளித்துள்ளனர்.
ரஞ்சித் கண்டனம்
இந்த புகார்களின் பேரில் காவல்துறை விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடுத்துள்ளது.
இதனை அடுத்து பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்ப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, விடுதலை சிகப்பி மீது தொடுக்கப்பட்ட வழக்குக்கு எதிராக குரல் கொடுப்போம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தனிமனிதனுக்கு கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறாத? என பலரும் சமூக வலைத்தளங்களில் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.