கோடிகளில் சொத்துமதிப்பு.., பிக்பாஸில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் திகதி தொடங்கியது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் எண்ட்ரி கொடுத்ததார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
முத்துக்குமரன், அருண் பிரசாத், விஜே விஷால், ரஞ்சித், ஜெஃப்ரி, தீபக், ராணவ், ரயான், ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா என மொத்தமாக 12 பேர் மட்டுமே உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. mஇவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் ரஞ்சித் மட்டும் தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்குவது மட்டுமின்றி அதிக சொத்து மதிப்பு கொண்ட போட்டியாளாராகவும் ரஞ்சித் தான் இருக்கிறார்.
இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு 4 முதல் 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |