”ராஜா எப்போதும் ராஜா தான்” கோலிக்கு ஆதரவாக பிரபல நடிகர்
டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியதாக திடீரென அறிவித்த கோலிக்கு ஆதரவாக பிரபல நடிகரான ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதாக அறிவித்தார்.
இவருக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், பிரபல நடிகரான ரன்வீர் சிங், 'ராஜா எப்போதும் ராஜாவாக இருப்பார்' என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இதுவரை பாத்திராத வகையில் இந்திய டெஸ்ட் அணியை மிகச் சிறந்த அணியாக மாற்றிய உங்கள் சேவைக்கு நன்றி என நடிகர் நகுல் மேத்தா தெரிவித்துள்ளார்.
இதுதவிர கோலிக்கு ஆதரவாக அலியா பட், அதியா ஷெட்டி, வாணி கபூர், சாரா டெண்டுல்கர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.