16 வயது சிறுமி கர்ப்பம்! கருவை கலைக்க சொல்லி வெறிச்செயலில் ஈடுபட்ட கொடூரன்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதல் மயக்கத்தில் சிக்க வைத்து இளைஞர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்தி(23), ஈரோட்டில் உள்ள கோழிகடை பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சக்தி சாமர்த்தியமாக சிறுமியிடம் காதல் வலையை வீசியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமானதால் கருவை கலைக்க சிறுமிக்கு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.
இதில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பெற்றோர்களிடம் உண்மையை கூறியுள்ளனர்.
இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, குறித்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.