வீட்டில் வரவழைத்து பெண் சீரழிப்பு... லண்டனில் விசாரணையை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியர்
அவுஸ்திரேலியரான முதலீட்டு வங்கியாளர் ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமான பெண்ணை வீட்டில் வரவழைத்து வலுக்கட்டாயமாக உறவில் ஏற்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணையை எதிர்கொள்கிறார்.
டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமான பெண்
அவுஸ்திரேலியரான 31 வயது வருண் விநாயக் என்பவரே, டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமான பெண் ஒருவரை, அவரது ஒப்புதல் இல்லாமல் பலாத்காரம் செய்ததாக குற்ற வழக்கை எதிர்கொண்டு வருபவர்.
@dailymail
ஆனால், குறித்த பெண்ணே தம்மை அப்படியான நிலைக்கு கொண்டு சென்றார் எனவும், சம்பவம் நடந்த அடுத்த நாள், தாம் மறுப்பு தெரிவிக்க முயன்றதாகவும், இனி மேலும் இந்த விவகாரத்தில் எவர் ஒருவர் மறுப்பு தெரிவித்தாலும் அதை மதிக்க கற்றுக்கொள் என குறுந்தகவல் அனுப்பினார் எனவும் விநாயக் தெரிவித்துள்ளார்.
மத்திய லண்டனில் உள்ள விநாயக்கின் குடியிருப்பில் வைத்தே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. குறித்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும், விநாயக் கண்டுகொள்ளவில்லை எனவும், தாம் எல்லைகளை மீறுபவன் என பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டுவதாக தாம் கருதவில்லை
இந்த வழக்கு விசாரணை சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தம்மீது குற்றஞ்சாட்டியுள்ள பெண்ணுடனான வேளைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும்,
குறித்த பெண் உறவுக்கு விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளது, தம்மை அவர் பலாத்காரம் செய்துவிட்டார் என குற்றஞ்சாட்டுவதாக தாம் கருதவில்லை எனவும் விநாயக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், தொடர்புடைய பெண் தம்மை அப்படியான ஒரு நிலைக்கு தள்ளியதாகவும் விநாயக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.