லண்டன் இரவுவிடுதியில் நடந்த தாக்குதல்: பிரபல அமெரிக்க ராப் பாடகர் நீதிமன்றத்தில் ஆஜர்
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ராப் பாடகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
போத்தல்களால் தாக்குதல்
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகரான கிறிஸ் பிரவுன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் இரவு விடுதியில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்.
இசை தயாரிப்பாளரை அவர் போத்தல்களால் தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது GBH குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பிரவுன் தன்னை தலையில் இரண்டு அல்லது மூன்று முறை போத்தலால் தாக்கியதாகவும், பின்னர் தரையில் படுத்திருந்தபோது அடித்து உதைத்ததாகவும் தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராப் பாடகர்
இந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ் பிரவுன் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் இன்று மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கிறிஸ் பிரவுன் (Chris Brown) தனது வளமான R & B குரல் மற்றும் பின்னர் ராப் மூலம் இளம் வயதிலேயே புகழ் பெற்றார். மேலும், சக இசை நட்சத்திரம் ரிஹானா உறவில் இருந்ததற்காக அறியப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |