கனடாவில் நிகழ இருக்கும் அரிய வானியல் நிகழ்வு
விண்கற்கள் மழையாகப் பொழியும் நிகழ்வு ஒன்றும் கனடாவுக்கு புதிதில்லை என்பது உண்மைதான்.
ஆனால், இம்முறை வால் நட்சத்திரம் ஒன்று உடைந்ததால் விண்கற்கள் மழை அல்ல, விண்கற்கள் புயலே உருவாகப்போகிறதாம்!
இம்மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்த அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.
இதற்கு முன் 2001ஆம் ஆண்டில், பச்சை நிற நட்சத்திரங்கள் நிமிடத்திற்கொன்றாக நீண்ட வாலுடன் பல மணி நேரத்துக்கு கொட்டிய நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு அடுத்தபடியாக 2099ஆம் ஆண்டுதான் அடுத்த விண்கல் புயல் உருவாகுமாம்.
உண்மையில், Comet SW3 என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம் ஒன்று 1995ஆம் ஆண்டு உடைந்து சிதறிய நிலையில், நம்முடைய பூமி இப்போதுதான் அந்த துகள்களின் சிதறலைக் கடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.