கர்ப்பபைக்கு வெளியே வளர்ந்த குழந்தை: இலங்கை வைத்தியர்கள் சாதனை
இலங்கையில் கொழும்பு சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த முறையானது முப்பதாயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் அரிதாக நிகழ்வென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று வைத்தியசாலையில் பிரத்யேக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இது போன்ற கர்ப்பம் மிகவும் அரிதானது, முப்பதாயிரத்தில் ஒருவருக்கு தான் குடலில் நஞ்சுக்கொடி பொருத்தப்பட்ட குழந்தை பிறக்கும்.
தேசிய வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து இந்த பாரிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் இருந்து குறித்த குழந்தையின் தாய் கொழும்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவர்கள் இங்கு வந்த நிலையில், இன்று குழந்தையை ஆரோக்கியமாக பிரசவித்துள்ளார்.
தாய் மற்றும் சேய்
தற்போது தாய் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது. குழந்தை சிறந்த நிலையிலும் மற்றும் 2.300 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.
வைத்தியக்குழு
குழந்தையின் நஞ்சுக்கொடி கருப்பைக்கு வெளியே சென்று குடலுடன் இணைக்கப்பட்டு இருந்தது. 28 வது வாரத்தில் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, இதற்காக சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு தாயின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து வந்துள்ளது.
வயிறு மற்றும் சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த குழந்தை இருந்தது. பல சோதனைகளின் பின்னரே சத்திரசிகிச்சையின் மூலம் குழந்தையை எடுத்துள்ளனர்.
28 வார கர்ப்பத்தில், கருவின் போதுமான வளர்ச்சி இல்லாததால், தாய் 34 வாரங்கள் வரை மகளிர் சோய்சா மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இன்று, 16ம் திகதி, சிறப்பு வைத்திய குழுவினர், அறுவை சிகிச்சைக்கு பின், குழந்தையை வெற்றிகரமாக பிறந்துள்ளது.
34 வாரங்கள் வரை உயிருடன் இருக்கும் வயிற்றுத் துவாரத்தில் இருந்து கருவை வெளியே எடுப்பது சிக்கலான அறுவை சிகிச்சையாகும்.
இந்த அறுவை சிகிச்சை மூலம் அதிக ரத்தப்போக்கு ஏற்படக்கூடும் என்பதால், கூடிய கவனத்துடனே இது செய்யப்பட்டது என வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |