பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு ரஷ்யாவிலிருந்து வந்த அபூர்வ தொலைபேசி அழைப்பு
உக்ரைன் போருக்கு முன், ரஷ்ய ஜனாதிபதியும், பிரான்ஸ் ஜனாதிபதியும், நெருங்கிய நண்பர்கள் போல அடிக்கடி தொலைபேசியில் உரையாடிக்கொள்வதுண்டு.
உக்ரைன் போர் துவங்கியவுடன் கூட, அதேபோல பிரான்ஸ் ஜனாதிபதியாகிய இமானுவல் மேக்ரான், உரிமையுடன், தான் நண்பராக கருதும் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை அழைத்து போர் தொடர்பில் பேச, இவ்வளவு காலம் தொடர்ந்த நட்பை மதிக்காமல், மேக்ரானை அவமதித்துவிட்டார் புடின்.
அதனால், உலக அரங்கில் மேக்ரானுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டது. மேக்ரானை புடின் அவமதித்ததை ஊடகங்கள் பல தலைப்புச் செய்தியாக்கின.
இந்நிலையில், அபூர்வமாக மீண்டும் ரஷ்ய தரப்பிலிருந்து பிரான்சுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து வந்த அபூர்வ தொலைபேசி அழைப்பு
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து ரஷ்யா பிரான்ஸ் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆகவே, இரு தரப்பினருக்கும் இடையிலான தொலைபேசி தொடர்புகள் கிட்டத்தட்ட நின்றுவிட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sébastien Lecornuவை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.
ஒரு எச்சரிக்கை செய்தி
அவர், உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பில், பிரான்ஸ் தொடர்ந்து அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பது பிரான்சுக்கே பிரச்சினைகளை உருவாக்கும் என எச்சரித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஷ்யா தயாராக இருப்பதாகவும் Sergei Shoigu தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரஷ்யா இல்லாமல் ஜெனீவாவில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |