ஜேர்மனியில் இரும்புக்கால இளவரசருடைய அரிய கல்லறை கண்டுபிடிப்பு
ஜேர்மனியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இளவரசரின் அரிய கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Bad Camberg பகுதியில் சூரிய சக்தி பூங்கா கட்டுமானத்திற்கு முன் நடைபெற்ற அகழாய்வில், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அரிய இரும்புக்கால கல்லறையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கல்லறை, செல்டிக் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த இளவரசருக்கு உரியதாக இருக்காம் கருதப்படுகிறது.

கல்லறையில் தங்க நகைகள், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டி ஆகியவை அடக்கம் செயப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, Etruscan நாட்டிலிருந்து வந்த குடுவை மற்றும் வண்டி சக்கரங்களின் பாகங்கள், அந்த நபர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்ததை காட்டுகின்றன.
இந்த கல்லறை, ஹெஸ்ஸி பகுதியில் செல்டிக் உயர்ந்த சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. இது இரும்புக்கால ஆய்வுகளுக்கு மிக முக்கியமான கண்டுபிடிப்பு என ஹெஸ்ஸி மாநில தொல்லியல் நிபுணர் ப்ரொஃ. டாக்டர் உடோ ரெக்கர் கூறியுள்ளார்.
மேலும், X-ray மற்றும் CT scan மூலம் இன்னும் பல பொருட்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வண்டி அடக்கம் மிகவும் அரிதானது என்பதால், இது செல்டிக் இளவரசரின் அடையாளமாக கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு, ஹெஸ்ஸி மாநிலத்தின் தொல்லியல் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது. கலாச்சாரம், சமூக அமைப்பு, கைவினை திறன் மற்றும் அடக்கம் செய்யும் வழக்கங்கள் குறித்து புதிய தகவல்களை வழங்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதேபோல், இங்கிலாந்தில் Melsonby Hoard எனப்படும் இரும்புக்கால பொருட்கள் 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 800-க்கும் மேற்பட்ட பொருட்கள், வண்டி சக்கரங்கள் உள்ளிட்டவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் இந்த புதிய கண்டுபிடிப்பு, செல்டிக் சமூகத்தின் வரலாற்றை உலகளவில் புரிந்துகொள்ள உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |