அவுஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர மீன்! ஆராய்ச்சியாளர்கள் சொன்ன தகவல்
அவுஸ்திரேலியாவில் 22 வருடங்களுக்கு பிறகு அரிய வகை நடக்கும் மீன் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம்(CSIRO) இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பிங்க் நிற மீன் முதன்முதலாக Tasmania பகுதியில் 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் அதிக அளவில் கடற்கரைகளில் தென்பட்ட இந்த மீன் இனம் நாளடைவில் குறிப்பிட்ட கடற்கரைகளில் மட்டும் தென்படும் வண்ணம் அதன் இனம் குறைந்து போனது. 2012ஆம் இந்த மீன் இனம் ஆபத்தான நிலையில் உள்ள அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதன்பின் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் இப்போது Tasmania கடற்கரை பகுதிகளில் இந்த மீன்கள் தென்பட்டுள்ளன.
A very rare walking fish has been spotted for the first time in 22 years! Was that on your 2021 bingo card? ?
— CSIRO (@CSIRO) December 23, 2021
We’ve confirmed that the endangered pink handfish has been seen in a marine park off Tasmania’s south-west coast. https://t.co/nYFRsxk7Lf
அவுஸ்திரேலிய கடல் ஆராய்ச்சியாளர்கள் Tasman கடல் பூங்காவில் நீருக்குள்ளே கேமராவை வைத்து இந்த அரிய வகை மீன் இனம் மீண்டும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இந்த மீன் இனம் உயிரியலில் ஆங்லர்பிஷ் குடும்பத்தை சார்ந்தது. இந்த மீனின் சிறப்பம்சம் என்னவென்றால் உடலில் சிறிய கை போன்ற அமைப்புகள் உள்ளன. அவற்றை வைத்து இது கடலில் நடக்க பயன்படுத்துவதால் 'நடக்கும் மீன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.