1 கோடி மதிப்புள்ள அரிய பாம்பு- கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல்
இந்தியாவில், 1 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பு ஒன்றை பொலிஸார் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் கயா ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் அரசு ரயில்வே பொலிஸ் (GRP) இணைந்து நடத்திய சோதனையில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய சிவப்பு மண்ணுளி (Red Sand Boa) பாம்பு கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை, Operation WILEP என்ற வனவிலங்கு மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலை தடுக்கும் சிறப்பு நடவடிக்கையின் போது நடைபெற்றது.
பொலிசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை கண்காணித்து, அவர்கள் எடுத்துச் சென்ற நீல நிற பையில் சுமார் 4 அடி நீளமுள்ள சிவப்பு மண்ணுளி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

கைதாகியவர்கள், மொஹம்மது சதுல்லா (46) மற்றும் உபெந்திர குமார் (28) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பிரயாக்ராஜ் நகரிலிருந்து ஹாவ்ரா-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பை கொண்டு வந்து, கயாவில் ஒருவரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த பாம்பு, Wildlife Protection Act, 1972-இன் Schedule IV-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதனை வேட்டையாடுடல் மற்றும் கடத்துதல் குற்றமாகும். குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு மண்ணுளி பாம்பு, அதன் இரட்டைத் தலை போன்ற தோற்றம் காரணமாக “two-headed snake” என அழைக்கப்படுகிறது. இது அதிர்ஷ்டம், செல்வம், மாந்த்ரீகம் போன்ற மூடநம்பிக்கைகளால் சர்வதேச கருப்பு சந்தையில் 1 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை விலை பெறுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு, வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |