ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதப்பட்ட அரிய வைரஸ்: சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பு
சமீபத்தில் கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வௌவால் ஒன்றிடமிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட ரேபிஸ் வைரஸ் தற்போது வௌவால் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்
சுவிட்சர்லாந்தின் Glarus மாகாணத்திலுள்ள Mühlehorn என்னுமிடத்தில், வௌவால் ஒன்றில் ரேபிஸ் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
1992ஆம் ஆண்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் 7 முறை மட்டுமே ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட ரேபிஸ் வைரஸ் தற்போது வௌவால் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அசாதாரணமாக நடந்துகொள்ளும் வன விலங்குகள் எதையும் மக்கள் அணுகவேண்டாம் என்றும், யாரையாவது வௌவால் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |