அடிக்கடி ரசம் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
இன்றும் பல கிராமங்களில் உள்ள சிறிய ஹோட்டல்களில் ஒரு வழக்கம் உண்டு. வருகிற வாடிக்கையாளர்கள், சைவமோ, அசைவமோ எந்த உணவைச் சாப்பிட்டாலும் இறுதியாக அவர்களுக்குக் கொஞ்சம் ரசம் கொடுக்கத் தவறுவதில்லை.
ஏனெனில் ரசத்தில் அந்தளவுக்கு நன்மைகள் இருக்கின்றன.
ரசம் குடிப்பதால் ஏற்படும் பலன்கள்
ரசத்தில் உள்ள புளிக்கரைசலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.
புளியில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய்க் கிருமிகளிடம் இருந்து சருமத்தைக் காக்கும். சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்க உதவும்.
ரசத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. தயாமின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, நியாசின் மற்றும் ரீபோஃப்ளேவின் போன்ற சத்துகள் அதிகளவில் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தினமும் ரசத்தை உணவுடன் சேர்த்துக்கொள்வது, புற்றுநோய்களிடம் இருந்து நம்மைக் காக்கும். மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
இதில் கலக்கப்படும் மிளகு, உடல்பருமன் குறைக்க உதவும். உடலிலுள்ள நச்சுகள் வெளியேற ஊக்குவிக்கும்.