ஒரு கப் ஜவ்வரிசி போதும்.., தித்திக்கும் சுவையில் ரசகுல்லா செய்யலாம்
ரசகுல்லா கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா மாநிலங்களின் பாரம்பரிய இனிப்பாகும்.
இந்த சுவையான ரசகுல்லாவை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், ஜவ்வரிசி வைத்து தித்திக்கும் சுவையில் ரசகுல்லா எப்படி செய்வது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி- 1 கப்
- சோள மாவு- ½ கப்
- பால் பவுடர்- 1 கப்
- பால்- ¾ லிட்டர்
- சர்க்கரை- ¾ கப்
- ஏலக்காய்- 2
- குங்குமப்பூ- 5 இதழ்
செய்முறை
முதலில் ஜவ்வரிசியை 2 முறை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த ஜவ்வரிசி, சோள மாவு, அரை கப் பால் பவுடர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்த ஜவ்வரிசி கலவையை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் பால் சேர்த்து பின் அதில் பால் பவுடர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் கொதிக்கின்ற பாலில் உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான ரசகுல்லா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |